தீ மூட்டி குளிர்காய்ந்த பெண் மூச்சுத் திணறி சாவு: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!

நீலகிரி: குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டில் தீ மூட்டி குளிர் காய்ந்து உறங்கியபோது அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்த பெண் பலியானார். மயங்கிய நிலையில் இருந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


நீலகிரி: குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டில் தீ மூட்டி குளிர் காய்ந்து உறங்கியபோது அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்த பெண் பலியானார். மயங்கிய நிலையில் இருந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக எஸ்டேட் பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் விறகு மற்றும் அடுப்புக்கரியை பயன்படுத்தி தீமூட்டி குளிர்காய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் உள்ள வீட்டில் கஜபதி மற்றும் அவரது தம்பி மனைவி கலாவதி, மகன் மகேந்திரன் ஆகிய மூவரும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அப்போது தூக்கம் வருவதுபோல் இருந்ததால் மூவரும் உறங்கச் சென்றனர். காலையில் வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீட்டு குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஏற்கனவே கலாவதி உயிரிழந்தது தெரியவந்தது. முதற்கட்டவிசாரணையில் அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய வாயுவை சுவாசித்ததால் கலாவதி உயிரிழந்தது தெரியவந்தது. உறவினர் கஜபதி மற்றும் அவரது மகன் மகேந்திரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...