பொள்ளாச்சி: அரசு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, பணிசெய்ய விடாமல் தடுத்து பொதுக் கூட்டத்திற்கு, அதிமுக ஆள் சேர்பதாக திமுக ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பினர் சார் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

நேற்று, ஜனவரி 10 ஆம் தேதி, பொள்ளாச்சியில் திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு போட்டியாக, இன்று ஆளும் கட்சியின் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாலை பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டத்திற்கு ஆள் பிடிப்பதற்காக பொள்ளாச்சி தாலுகா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஆகியோரை இன்று பணிக்கு செல்ல விடாமல் தடுத்து, அவர்களிடம் உங்களுக்கு இன்று பணி இல்லை, ஆனால் அதற்கான கூலி வழங்கப்படும் என்று கூறி, இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டு, பொள்ளாச்சி பொதுக் கூட்டத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று கூறி பொள்ளாச்சி திமுக ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன் தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதில், பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, கார்த்திகேயன், செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.