சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சார்சை முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை, அவர்களே தீர்மானிக்கலாம், என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி அறிவித்துள்ளார்.

பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அனைைவரும் நினைத்திருந்த நிலையில், தமிழக பா ஜ க தலைவர் எல்.முருகன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எங்கள் தலைமை தான் முடிவு செய்யும், என்றும் முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருந்தாலும், அது குறித்தான அறிவிப்பை, பாஜக தலைமையே அறிவிக்கும், என தெரிவித்தார்.
அவரின் கருத்து அரசியல் வட்டாரங்களில், குறிப்பாக அதிமுக மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் பலர் முருகனுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று உறுதியாக கூறி வந்தனர். அதன் படி, கடந்த 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற, அதிமுக பொது குழு கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர், எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும், கூட்டணி ஆட்சி கனவோடு யாரும் அணுகாதீர்கள் எனவும் கூட்டணி ஆட்சி என்பதற்கு தேவை இல்லை என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி கூறினார்.
முதல்வர் வேட்பாளர் குறித்து சர்ச்சை தொடர்ந்து வந்த நிலையில், திருச்சியில் நிருபர்களிடம் பேசிய பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி, தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரே அந்த கட்சியே தீர்மானிக்கும். கூட்டணியில் பெரிய கட்சி என்பதால் அ.தி.மு.க.தான் முடிவு எடுக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் எங்களை ஆதரிக்கின்றனர். கே.பி.முனுசாமி கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, என கூறினார்.