புதிதாக வரவுள்ள டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர வரவுள்ள டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாகிகள் இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர வரவுள்ள டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் நிர்வாகிகள் இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது, ஏழை மக்களின் அமைதியை வெகுவாக பாதிக்கிறது. பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை அருகே இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டது.

இந்த நிலையில், வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் சக்தி கிராமம், சின்னப்பம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே புதிதாக டாஸ்மாக் கடைகள் வர உள்ளது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த, ஆனைமலை அருகே உள்ள மக்கள் சக்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...