கோவை: கோவை நகரில் நியாய விலை கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை அகற்ற கோரி மாநகர காவல் ஆணையரிடம் திமுக கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் சிங்காநல்லூர் எம்எல்ஏ நா.கார்த்திக் மனு அளித்தார்.
கோவை: கோவை நகரில் நியாய விலை கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை அகற்றக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் திமுக கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் சிங்காநல்லூர் எம்எல்ஏ நா.கார்த்திக் மனு அளித்தார்.
மனு அளித்த பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்:-
கோவை பீளமேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்து வாலிபர் ஒருவர் பலியானார். ஏற்கனவே பேனர் சரிந்து விழுந்து பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கோவையில் பல இடங்களில் ரேஷன் கடை முன்பு அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.
பொங்கல் பரிசு 2500 ரூபாயை தங்களது சொந்தப் பணத்தில் கொடுப்பது போல் ஒரு பிம்பத்தை அதிமுகவினர் மக்களிடையே ஏற்படுத்துகின்றனர். அதிமுகவினர் தங்களுடைய அரசியல் கட்சி விளம்பரத்துக்காக தொடர்ந்து பேனர் வைப்பது சட்ட விரோதமான செயலாகும். அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகர காவல் ஆணையரிடம் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்