திருப்பூர்: திருப்பூர் மாநகரில் சிதிலமடைந்து கிடக்கும் சாலைகளை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் பணிகள் முடிந்தும் சரிவர மூடப்படாததன் காரணமாக சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக இருக்கும் அந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.