கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஹாரன் பாலிடம் 2 நாள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஹாரன் பாலிடம் சிபிஐ 2 நாள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பமாக சிபிஐ விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ, கோபி சிறையில் அடைத்தனர். இதில் ஹாரன் பால், அருளானந்தம், பைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது ஹாரன் பால் சரியாக விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று சிபிஐ போலீசார் கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரியிருந்தனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் பாதிப்படைந்த இரண்டு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் கைதான ஹாரன் பால் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு சிபிஐ காவலில் எடுக்க கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதியினை தந்துள்ளது.
சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுக்க 5 நாள் கேட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு மட்டும் கோவை மகளிர் நீதி மன்றம் அனுமதி தந்தனர். அருளானந்தம், பாபு ஆகிய நபர்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தந்தனர்.
ஆனால், ஹாரன் பால் ஒத்துழைப்பு தராததினால் 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர். இதனிடையே, நீதிமன்றம் 2 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில், விசாரணையின் முடிவில் பாலியல் குற்றவாளிகள் கூடுதலாக கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.