திருப்பூர்: திருப்பூரில் லாரி மோதிய விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் இருந்து ஜல்லிக்கல் லோடு ஏற்றி வந்த லாரி, இன்று அதிகாலை திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்ததில், அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி தெய்வானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தெய்வானையின் மகன் பழனிச்சாமி பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.