தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் கண்டிப்பாக வருவார்: பிரேமலதா தகவல்!

கோவை: தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் கண்டிப்பாக வருவார் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.


கோவை: தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் கண்டிப்பாக வருவார் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரத்தில் தே.மு.தி.க. சார்பில் தொண்டர்கள் இணையும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசும்போது, `என் தந்தையின் கனவை நனவாக்க போராடி வருகிறேன். சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. நல்ல மனிதர்களை சம்பாதிக்கவே விரும்புகிறேன். ஆட்களை இழுக்கும் கட்சிகளால் தே.மு.தி.க. சுத்தமாகி வருகிறது' என்றார்.

விழாவில் பங்கேற்ற பொருளாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறும்போது, `பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்துக்குப் பின் நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை கேட்டறிந்து கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். பெண்களை இழிவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்துக்குரியவர்கள். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குரியவர்கள். தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் கண்டிப்பாக வருவார். கூட்டணியில் இருந்தாலும் முரசு சின்னத்தில் போட்டியிடுவோம்' என்றார். `ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று அழகிரி கூறியுள்ளாரே...' என்ற கேள்விக்கு `தம்பியைப் பற்றி அண்ணனுக்குதான் தெரியும்' என்று பதிலளித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...