கோவை: கோவையில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான மருந்துக் கிடங்கு ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கோடிக்கணக்கிலான மருந்துகள் எரிந்து நாசமானது.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பிரபல பார்மசி கம்பெனிக்குச் சொந்தமான மருந்துக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் மருந்துகள் மொத்தமாக இருப்பு வைக்கப்பட்டு திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மருந்துக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிறுவனத்துக்கு தமிழக முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மருந்து குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடோன் காவலாளிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திலிருந்து 3-க்கும் மேற்பட்ட வாகனங்கள் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்களுடன் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ கட்டுக்குள் வராததால் அருகே உள்ள தனியார் வாட்டர் சர்வீசில் இருந்தும் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் 6 மணி நேரப் போராட்டத்துக்குப்பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் குடோன் சேதமடைந்ததுடன் பெட்டி, பெட்டியாக வைக்கப்பட்டிருந்த சாதாரண மருந்துகள் முதல் உயிர் காக்கும் மருந்துகள் வரை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தெரியவந்துள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடைபெற்றதா? அல்லது நாச வேலை காரணாமா? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் மொத்த சேதம் எவ்வளவு என்ற முழுமையான விவரம் தெரிய வரும்.
தீ விபத்து நடைபெற்ற இந்த மருந்து குடோனில் பல கோடி மதிப்பிலான மாத்திரை, மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்படும். இங்கிருந்து பல மாவட்டங்களில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பார்மசிக்கு தினமும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக மாத்திரை, மருந்துகள் எரிந்து நாசமானதால் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட பார்மசிக்கு சில நாட்களுக்கு மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தெரிகிறது.