கோவையில், கோர்ட் உத்தரவை மீறி ரேஷன் கடைகளில் ஆளும் கட்சி பேனர்கள்!

கோவை: கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் கோர்ட் உத்தரவை மீறி ஆளுங்கட்சியினரின் கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் கோர்ட் உத்தரவை மீறி ஆளுங்கட்சியினரின் கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம் மற்றும் ரூ. 2,500 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதற்காக பல ரேஷன் கடைகளின் முன்பு கொடிகள் கட்டப்பட்டும், பேனர்கள் வைக்கப்பட்டும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டும் வருகின்றன. இதனால் ஆளும் கட்சியினர் பொங்கல் பரிசு வழங்கப்படுவதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ரேசன் கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பு கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை ராமநாதபுரம், புலியகுளம், சுங்கம், நல்லாம்பாளையம், சாமி நகர் பகுதிகளிலும், கோயம்புத்தூர் மதுக்கரை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் இதுவரை அகற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர பொங்கல் பரிசு வழங்கப்படும் கடைகளில் ஆளும் கட்சியினர் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது கோவை மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற விதிமுறைகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி கொடிகள், பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...