சூப்பர்வைசர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு!

கோவை: கோவை அன்னூர் அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசரின் வீட்டுப் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அன்னூர் அருகே தனியார் கம்பெனி சூப்பர்வைசரின் வீட்டுப் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

கோவை அன்னூர் எஸ்.எஸ்.குளம் பொன்னே கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் ஐசக். இவர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது குடும்பத்துடன் தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு பிறகு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள் மாயமானதும், மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஐசக் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...