கோவை: குழந்தைகளுடன் தாய் மாயமானார்.
கோவை: குழந்தைகளுடன் தாய் மாயமானார்.
கோவை கருமத்தம்பட்டி வடுகன் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நசுருதீன். இவரது மனைவி சுதா (வயது 36). இவர்களுக்கு சோபீசா (வயது 16) என்ற மகளும், நிசாருதீன் (வயது 9) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் சுதா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் தொடர்புகொண்டு தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து நசுருதீன் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுதா மற்றும் அவரது 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.