கோவை - சக்தி சாலை விரிவாக்க பணி: தனியார் நிறுவன மூலம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு..!

கோவை: கோவை - சக்தி சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இந்த பணியினை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை - சக்தி சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இந்த பணியினை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.



பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் ராஜாமணியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை முதல் சத்தி வரையுள்ள என். ஹச் 209 சாலை 456 கிலோ மீட்டர் கொண்ட சாலையாகும். இந்த சாலை கோவை முதல் அன்னூர் வழியாக சத்தியமங்கலம் மற்றும் கார்நாடக மாநில பகுதி செல்லும் பிரதான சாலையாகும்.

கோவை முதல் சக்தி வரை உள்ள சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.அதற்கான திட்ட அறிக்கியினை தயார் செய்ய தனியார் வசம் வழக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அன்னூர் அருகே குரும்பபாளையம், புளியம்பட்டி, சக்தி, பண்ணாரி போன்ற பகுதிகளில் உட்கிராமங்கள் வழியாக 98 கி.லோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட உள்ளன. இதனிடையே இதில், 60 கிலோ மீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் கற்களை நட்டி வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு மூலம் மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டும். தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தர்னாவில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியன் மூலம் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...