போலி நகையை அடகு வைத்த மோசடிப் பெண் கைது: 40-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலம்!

கோவை: போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் இதேபோல் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலமானது.


கோவை: போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் இதேபோல் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலமானது.

கோவை கவுண்டம்பாளையம் எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ஜீவா ராம். இவர் இடையர்பாளையம் பகுதியில் நகை அடகுக் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தன்னிடம் தங்க மோதிரம் இருப்பதாகவும், அதனை அடகு வைத்து பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அப்போது பணம் தருவதாகக்கூறி மோதிரத்தை வாங்கி சோதனை செய்து பார்த்தார். பரிசோதித்துப் பார்த்ததில் அது தங்க மோதிரம் அல்ல, போலி நகை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அந்தப் பெண்ணிடம் நைசாக பேசி பணம் தருவதாக காத்திருக்கச் சொன்னார். பின்னர் துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த இளம் பெண்ணை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்தப் பெண் ஜி.எம்.மில்ஸ் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மனைவி ஜெயபிரபா (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர் இதேபோல 40 -க்கும் மேற்பட்ட கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயபிரபாமீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...