கோவை: கத்திமுனையில் காரை கடத்தி ரூபாய் 27 லட்சம் கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அந்தக் காரில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 90 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த மாதம் 25-ஆம் தேதி பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு காரில் சென்றார். காரை கேரளாவைச் சேர்ந்த சம்சுதீன் என்பவர் ஓட்டினார். கோவை எட்டிமடையை அடுத்த நவக்கரை, பாலக்காடு நெடுஞ்சாலையில் கார் சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூபாய் 27 லட்சத்தை கொள்ளையடித்தது. அத்துடன் காரையும் கடத்திச் சென்றனர். ரூபாய் 90 லட்சம் இந்த காரில் இருந்து சிக்கியது.
இதுகுறித்து காக்கா சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தனிப்படை அமைத்து தேடி வந்தன. இதற்கிடையே சம்பவம் நடந்த மறுநாள் கடத்தப்பட்ட கார் மாதம் பட்டியல் மீட்கப்பட்டது. காரை சோதனை செய்தபோது அதில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு பணம் பதுக்கி வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் காரில் இருந்து ரூபாய் 90 லட்சத்தை மீட்டனர். விசாரணையில் அந்தப் பணம் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அப்துல் கலாம் மற்றும் அவரது கார் ஓட்டுனர்கள் சம்சுதீன் ஆகியோரிடம் விசாரித்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்று அவர்களை விடுவித்தனர்.
தொடர்ந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை பிடிப்பதற்காக டி.எஸ்.பி சீனிவாசலு மேற்பார்வையில் மதுக்கரை ஆய்வாளர் முருகேசன் உட்பட 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4 சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மதுக்கரை மெகாசிட்டி பகுதியில் கொள்ளைக்கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த உன்னிக்குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 5 பேர் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று முக்கியக் குற்றவாளிகளான சந்தோஷ், சந்திப், சோபின், ராதாகிருஷ்ணன், ஸ்ரீஜித் உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.