ஆழியார் சோதனைச்சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே ஒற்றை காட்டு யானை: காட்டுக்குள் அனுப்ப வனத்துறை மும்முரம்!

பொள்ளாச்சி: ஆழியார் சோதனைச்சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே ஒற்றை காட்டு யானை சுற்றி தெரிகிறது. அதை அப்பகுதியில் உள்ள வனக் காப்பகத்துக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.


பொள்ளாச்சி: ஆழியார் சோதனைச்சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே ஒற்றை காட்டு யானை சுற்றி தெரிகிறது. அதை அப்பகுதியில் உள்ள வனக் காப்பகத்துக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை, கரடி என பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஆழியார் சோதனைச் சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே வனத்தை விட்டு வெளியேறுவதற்காக ஒற்றை காட்டு யானை திடீரென வந்ததால் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனச்சரகர் புகழேந்தி கூறுகையில், 'வருடத்துக்கு ஒருமுறை ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் நடமாடுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி பல்வேறுகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் காட்டு யானை ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் வாகன ரோந்துப் பணியில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்' என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...