பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.ஐ 3 பேரை நாளை காவலில் எடுக்கிறது!

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் 3 பேரை சி.பி.ஐ நாளை காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறது.


கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் 3 பேரை சி.பி.ஐ நாளை காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பணம் பறிக்கும் செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது. இது குறித்து மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் இரண்டு பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹாரன் பால், பாபு உள்ளிட்ட 3 பேரை கடந்த 5-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இந்த வழக்கில் கூடுதல் தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். நீதிமன்ற அனுமதி அளிக்கும் பட்சத்தில் அவர்கள் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் இன்னும் பல சிக்கலாம் என்பதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...