விரைவில் தேமுதிக செயற்குழு பொதுக்குழுவை கூட்டி உறுதியான முடிவை கேப்டன் அறிவிப்பார் - திருப்பூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திருப்பூர்: கூடிய விரைவில் கேப்டன் அவர்கள் தேமுதிக செயற்குழு பொதுக் குழுவைக் கூட்டி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு நிலையான உறுதியான முடிவை அறிவிப்பார் என திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


திருப்பூர்: கூடிய விரைவில் கேப்டன் அவர்கள் தேமுதிக செயற்குழு பொதுக் குழுவைக் கூட்டி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு நிலையான உறுதியான முடிவை அறிவிப்பார் என திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள அருள்புரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சியினர் தேமுதிகவில் இணையும் இணைப்பு விழா நடைபெற்றது.



இதில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நிச்சயமாக கேப்டன் கிளைமாக்ஸில் வந்து பிரச்சாரம் மேற்கொள்வார் என்றார்.

அதிமுக கட்சியின் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார், பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறி இருக்கக் கூடிய சூழ்நிலையில் நாங்களும் காத்திருக்கிறோம், தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றார்.



அதேபோல, செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு அறிவிக்கப்படும் எனவும், உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து அவதூறாக பேசுவதை தவிர்ப்பது நல்லது எனவும், நிறைய சாதிக்க வேண்டிய உள்ள சூழ்நிலையில் அவப்பெயரை பெற்று விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்கள் போராட்ட உரிமையை பறிக்கக் கூடாது என பேசினார்.

பின்னர், தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், தேமுதிக தனித்து நின்றாலும் கூட்டணியில் இருந்தாலும் தேமுதிக தனது இலக்கை அடையும் எனவும் விரைவில் கோட்டையில் தேமுதிக கொடி ஏற்றும் கேப்டன் முதல்வராக வருவார் என்று பேசினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...