வன்னியர்களுக்கு 20 சத இட ஒதுக்கீடு வழங்கினால் முக்குலத்தோருக்கு 25 சதவீத ஒதுக்கீடு வேண்டும்: கருணாஸ் கோரிக்கை!

திருப்பூர்: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், தமிழகத்தில் அதிக மக்கள்தொகை உள்ள முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கருணாஸ் கூறியுள்ளார்.


திருப்பூர்: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், தமிழகத்தில் அதிக மக்கள்தொகை உள்ள முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கருணாஸ் கூறியுள்ளார்.

திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்:

முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்புக்கும், ஜாதிக்கும் எதிரானது அல்ல. அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேலும், முக்குலத்தோரின் 50 ஆண்டு கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தல் நெருங்க இருக்கின்ற சூழ்நிலையில் அ.தி.மு.க. எங்களைப் போன்ற சிறிய அமைப்புகள், கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு நடத்தும் எனவும் கடந்த முறை ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும் கேட்போம்.

மேலும் சசிகலா 27-ஆம் தேதி விடுதலையாக இருப்பதை எங்கள் சமூகம் மட்டுமல்லாமல் உண்மையான அ.தி.மு.க.வினர் வரவேற்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் அவரோடு செல்வார்கள். கட்சியில் சலசலப்பு ஆகுமா? என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...