வீட்டில் வளர்த்த சந்தன மரம் வெட்டி கடத்தல்!

கோவை: வீட்டில் வளர்த்து வந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர்.


கோவை: வீட்டில் வளர்த்து வந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள திருநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், டிரைவர். இவரது வீட்டில் சந்தன மரம் வளர்த்து வந்தார். 25 அடி உயரம் வளர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார் வழக்கம்போல வீட்டின் முன்பக்க கதவை மூடிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 2 மணி அளவில் மரம் முறிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டு எழுந்த செந்தில்குமார் வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 மர்ம நபர்கள் செந்தில்குமாரின் வீட்டு முன்பு வளர்த்து வந்த சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் 5 அடி உயரமுள்ள சந்தன மரத் துண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...