மக்கள் பிரச்சினைகளுக்குக் காரணமாக இல்லாமல் தீர்வு தேடி தர வேண்டும்: போலீசாருக்கு ஐ.ஜி பெரியய்யா அறிவுரை!

கோவை: பொதுமக்களின் பிரச்சினைகளுக்குக் காரணமாக இல்லாமல், தீர்வு தேடித்தரும் வகையில் காவல்துறையினர் இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா கேட்டுக் கொண்டார்.


கோவை: பொதுமக்களின் பிரச்சினைகளுக்குக் காரணமாக இல்லாமல், தீர்வு தேடித்தரும் வகையில் காவல்துறையினர் இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா கேட்டுக் கொண்டார்.



பொள்ளாச்சி உட்கோட்ட காவல் நிலையப் பகுதிகளில் உள்ள 51 கிராமங்களில் கிராம கண்காணிப்பு காவலர் அலுவலர் நியமனம் மற்றும் அறிமுக விழா பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது, விழாவில் கலந்து கொண்ட மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா, கிராம கண்காணிப்பு காவல் அலுவலராக நியமிக்கப்பட்ட காவல்துறையினருக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.



அதன்பின்னர் காவல்துறையினர் மத்தியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பேசியதாவது:-

கிராமப்புற மக்களுடன் இணைந்து குற்றங்களைத் தடுப்பதுடன் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நல்ல சேவைகளை செய்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நன் மதிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களின் பிரச்சினைகளுக்குக் காரணமாக இல்லாமல், தீர்வு தேடித்தரும் வகையில் காவல்துறையினர் இருக்க வேண்டும். குற்றங்களைத் தடுத்து, குற்றங்களைக் கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நல்லபடியாக இருந்தால் மட்டுமே தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட முடியும். சில மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் இருந்தாலும், தமிழகக் காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாத்து உலகிலேயே மிகச்சிறந்த காவல்துறையான ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருக்கிறது.



இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...