சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கனாகச் செயல்படுகிறார் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கனாகச் செயல்படுகிறார் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தீர்மானங்கள் பின்வருமாறு:-
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை நிறுத்துவதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜெயலலிதா நினைவிடத்தை உலகப்புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகியோருக்கு முழு அதிகாரம் வழங்குவது, கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசுப் பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவிப்பது, தமிழக அரசை விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிப்பது, தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்பது எனவும், உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து வேலைவாய்ப்பை அதிகரித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவது, நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகளைத் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, அ.தி.மு.க.வின் ராமன் - லட்சுமணனாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கனாகச் செயல்படுகிறார் என்றும் கூறினார்.