9 மாதங்களுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறப்பு..! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி: கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறக்கப்பட்டது.


நீலகிரி: கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

மேலும், யானை சவாரி, வாகன சவாரி, வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் அங்குள்ள சுற்றுலா விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை புலிகள் காப்பக நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தியிருந்தது.



இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைக்குட்பட்டு 50% இருக்கைகளுடன் இன்று முதல் வாகன சவாரி துவக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



மேலும், யானைகள் முகாமும் திறக்கப்பட்டது.



அரசு அறிவித்துள்ள அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா விடுதிகள் அனைத்தும் 11ம் தேதி முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...