கோவை: கோவையில் மழையால் வீடிழந்த ஏழை எளிய மக்களுக்கு பையா கவுண்டர் நிவாரணத்தொகையை நேரில் சென்று வழங்கினார்.

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களின் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கோவை தி.மு.க. மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா கவுண்டர் நேரில் சென்று அந்தப் பகுதி மக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மேலும் அவர் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையும் வழங்கினார். இதில் பகுதி பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.