இணையதள சூதாட்டத்தில் 7 லட்சம் இழந்தவர் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை!

திருப்பூர்: இணையதள சூதாட்டத்தில் 7 லட்ச ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் மனவேதனையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.


திருப்பூர்: இணையதள சூதாட்டத்தில் 7 லட்ச ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் மனவேதனையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எல்வின் பிரட்ரிக். இளைஞரான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் இணையதளத்தில் ஆர்வமாக விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். தமிழக அரசு இணையதள சூதாட்டத்தை தடை செய்த பிறகும் விளையாட்டைத் தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை இழந்ததாகத் தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் திருப்பூர் வந்து திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் தற்கொலை செய்துகொண்டதால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் பெறப்பட்ட புகைப்படத்துடன் ஒத்துப்போனது. அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...