கோவை: கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கபட்டுள்ள 85 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதன் செயல்பாடுகளை துவக்கும் நிகழ்ச்சி ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை மாநகர் காவல் ஆணையர் சுமித்சரண் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.

கோவையில் மாநகர் முழுவதும் நடைபெறும் குற்றங்கள், விபத்துக்களை கண்காணிக்க மாநகர் காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மாநகர் முழுவதிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கபட்டுள்ள 85 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதன் செயல்பாடுகளை துவக்கும் நிகழ்ச்சியில் பேசிய, கோவை மாநகர் காவல் ஆணையர் சுமித்சரண், இதுவரை கோவை மாநகரில் 10,000 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டு செயல்பாட்டுவருவதாகவும், எந்த விதமான விபத்துக்கள், குற்றங்களையும் கண்டுபிடிக்க இந்த சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க இந்த சிசிடிவி கேமராக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கோவை மாநகர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின், குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா, போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசன் மற்றும் உதவிஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.