கோவை மாநகராட்சியில்‌ சாலையோரங்களில் நிற்கும் பழுதடைந்த வாகனங்களை அகற்ற ஆணையாளர் உத்தரவு!

கோவை: கோவை மாநகராட்சியில் சாலையோரங்களில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் சாலையோரங்களில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மற்றும்‌ வடக்கு மண்டலங்களில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மத்திய மற்றும்‌ வடக்கு மண்டலங்களில்‌ சித்தாபுதூர்‌, சின்னசாமி ரோடு, தனலட்சுமி நகர்‌, ஆவாரம்பாளையம்‌, நவஇந்தியா ஆகிய சாலைப்‌ பகுதிகளில்‌ ஆய்வு மேற்கொண்ட அவர் மத்திய மண்டலம்‌ சித்தாபுதூர்‌, சின்னசாமிநாயுடு சாலையில்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த தனியார்‌ கடை ஊழியா்கள்‌ 5 பேருக்கு தலா 200 வீதம்‌ ரூ.1,000 அபராதம்‌ விதித்தார்‌. இதைத் தொடர்ந்து அனைவரும்‌ கட்டாயம் முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌ என அறிவுறுத்தினார்.



அதனைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.53 ஆவாரம்பாளையம்‌, தனலட்சுமி நகா்‌ பகுதியில்‌ செயல்பட்டுவரும்‌ கடைகளில்‌ குப்பைகளை

சாலையோரங்களில்‌ கொட்டக்கூடாது என்றும் அதற்கான குப்பைத்தொட்டிகளில்‌ மட்டுமே அவற்றை கொட்ட வேண்டும்‌ என்றும் கூறினார். குப்பைகளை சாலைகளில்‌ கொட்டினால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என எச்சரித்த அவர் சாலையோரங்களில்‌ இருக்கும்‌ தேவையற்ற பொருட்கள்‌, பழுதடைந்த வாகனங்களை உடனடியாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.40, நவஇந்தியா சாலையில்‌ செயல்பட்டுவந்த தனியார்‌ ஆவின்‌ பாலகத்தில்‌ குப்பைகளை சாலையோரங்களில்‌ கொட்ட வேண்டாம்‌, மீறிக் கொட்டினால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என அறிவுறுத்தினார்.



மத்திய மற்றும்‌ வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ குடிநீர் பணிகளுக்காக குடிநீர்க் குழாய்களில்‌ கசிவு ஏற்பட்டதை சரிசெய்வதற்காக சாலைகள் தோண்டப்படுள்ளன. அந்த இடங்களில்‌ உடனடியாக சாலையை சீரமைத்து சரிசெய்திட வேண்டுமென பொறியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாநகரப்பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மண்டல உதவி ஆணையா்கள்‌ மகேஷ் கனகராஜ்‌ (மத்திய), செந்தில்குமார்‌ ரத்தினம்‌ (வடக்கு), செயற்பொறியாளர்கள்‌ (மத்திய) ரவிச்சந்திரன்‌, பார்வதி (குடிநீர் திட்டம்)‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர்‌ (திட்டம்‌) ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ ராதாகிருஷ்ணன்‌, ராமச்சந்திரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...