பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் அமைச்சர் வேலுமணியுடன் தொடர்பில் இருந்த நிர்வாகி என்பதால், அவர் பதவி விலக வேண்டும் - திமுக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேட்டி

பொள்ளாச்சி: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.



பொள்ளாச்சி: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், உள்ளிட்டோரை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில், அவர் செய்தியாளரிடம் பேசுகையில், ஆளும் அதிமுக அரசுக்கு ஏழை எளிய மக்களின் நலன் குறித்து எவ்வித அக்கறையும் இல்லை, விவசாயிகளை குறித்து கவலையும் இல்லை என்றார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று பேரை சிபிஐ கைது செய்தனர். பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவங்களை கண்டித்து, 10ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக, எம்.பி. கனிமொழி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, என்று தெரிவித்த அவர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் மிக நெருக்கமாக இருந்த அருளானந்ததை, தற்போது பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதி சிபிஐ கைது செய்துள்ளது. எனவே, இது சம்பந்தமாக நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வரும் வரை, அமைச்சர் வேலுமணி நல்ல மனிதராக இருந்தால், தானாக முன்வந்து பதவி விலக வேண்டும், என்றார்.

இல்லையென்றால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், உலகப் புகழ்பெற்ற பொள்ளாச்சி மாட்டு சந்தையை, துணை சபாநாயகர் ஜெயராமன் அவர் பகுதிக்கு எடுத்துச் செல்வதற்காக அழித்து விட்டார் என்று வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர் இன்று கூறிய கார்த்திகேய சிவசேனாபதி, இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...