விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிறுவன் உடலுறுப்புகள் தானம்: 7 பேருக்கு புதுவாழ்வு!

கோவை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடலுறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டு அவர்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்றனர்.


கோவை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடலுறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டு அவர்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் ரோஹித் கண்ணா (வயது 17). இவர் கடந்த 31-ம் தேதி கோவை அருகே பொள்ளாச்சி பல்லடம் சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். மருத்துவமனை தலைமை டாக்டர் பக்தவத்சலம் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவ குழுவினர் ரோஹித் கண்ணாவின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல், ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர் கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் கே.ஜி. மருத்துவமனை நோயாளிக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டது. இதற்காக தனி விமானம் மூலம் இதயம், நுரையீரல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 பேர் புதுவாழ்வு பெற்றனர். மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரை டாக்டர்கள் பாராட்டினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...