காங்கேயம் ஓலப்பாளையம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி 3 பேர் பலி!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரிமீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் பலியானார்கள். சிறுவன், சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரிமீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் பலியானார்கள். சிறுவன், சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

சிங்காநல்லூர் வெள்ளளலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. மயில்சாமி என்பவர் காரை ஓட்டிச் சென்றார். காங்கேயத்தை அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் சென்றபோது சாலையில் பழுதாகி லாரி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கம் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் லாரியின் உள்ளே சென்று விட்டது. இதில் காரை ஓட்டிச்சென்ற மயில்சாமி (வயது 39), அவரது மனைவி இந்து (வயது 37) மற்றும் இந்துவின் தாயார் கௌசல்யா (வயது 60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் சிறுவன் கௌதம், சிறுமி ரம்யா, உறவினர் கலைவாணி ஆகியோர் காயமடைந்தனர்.



அவர்களுக்கு காங்கேயம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தையடுத்து தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வந்ததால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் பலியான சம்பவம் காங்கேயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து நடந்த ஓலப்பாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இதை கருத்தில் கொண்டு மனித உயிர்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என்று பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...