கோவை: காரமடையில் பட்டப்பகலில் பெண்ணிடமிருந்து 4 பவுன் நகையை ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் நேற்று மாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் அருகே காரமடை காந்தி நகர் கிராமத்தில் உள்ள தனது சம்பந்தி வீட்டுக்கு புறப்பட்டார். காந்தி நகர் பஸ் நிலையத்தில் இறங்கி தனது சம்பந்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த லட்சுமி சுதாரித்துக் கொண்டு நகையை இறுக்கிப்பிடித்துக் கொண்டார். ஆனால் கொள்ளையர்கள் விடாமல் நகையை இழுத்தனர். இதில் 4 பவுன் நகை கொள்ளையரிடமும் ஒரு பவுன் நகை விஜயலட்சுமியிடமும் சிக்கியது.
இதையடுத்து விஜயலட்சுமி அலறி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் விஜயலட்சுமியிடம் நகை பறித்த காட்சி பதிவாகியிருந்தது. கேமரா காட்சியை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.