கோவை: கோவை புட்டுவிக்கி ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவில் மேட்டைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 33) மற்றும் தடாகம் வ.உ.சி நகரைச் சேர்ந்த கார்த்தி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.