விவசாயியிடம் ஆன்லைனில் மக்காச்சோளம் வாங்கி ரூ. 30 லட்சம் மோசடி: பெண் கைது!

கோவை: விவசாயியிடம் ஆன்லைனில் உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருள்களை வாங்கி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டார்.


கோவை: விவசாயியிடம் ஆன்லைனில் உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருள்களை வாங்கி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் அசோக்குமார் (வயது 27). இவர் அப்பகுதியில் 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கொரோனா காலத்தில் விவசாயம் செய்வதற்காக விவசாய நகைக் கடன் பெற்று உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிட்டுள்ளார். சாகுபடி செய்த விளைச்சலை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கோவை வேலந்தாவனம் பகுதியில் செயல்பட்டுவரும் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தினர் கடந்த ஜூலை மாதம் அசோக்குமாரை தொடர்புகொண்டு உளுந்து மற்றும் மக்காசோளம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதையடுத்து அசோக்குமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டன் உளுந்து மற்றும் மக்காச்சோளத்தை விற்பனை செய்துள்ளார். இதற்காக முதல்கட்டமாக அந்த நிறுவனம் 2.25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தனர். நீண்ட நாட்களாகியும் மீதிப் பணத்தை கொடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் நிலுவையில் உள்ள பணம் குறித்து நிறுவன உரிமையாளரான கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த லூர்து மேரி என்பவரிடம் அசோக்குமார் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து அவர் பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று கோவை வந்த அசோக்குமார் இதுகுறித்து காக்கா சாவடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லூர்துமேரியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லூர்துமேரி கோவை வேளாந்தாவளம் சாலையில் தனியார் கட்டடத்தில் அறையை வாடகைக்கு எடுத்து ஆதி டிரேடர்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்ததும் இணையதளம் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை தொடர்பு கொண்டு விளைபொருள்களைப் பெற்று பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

கூடலூரை சேர்ந்த கமலநாதன் என்பவரிடம் ரூபாய் 3.60 லட்சம் மதிப்பிலான குறுமிளகு, ஞானமுருகன் என்பவரிடமிருந்து ரூபாய் 5.75 லட்சம் மதிப்பிலான முந்திரி, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வைபவ் என்பவரிடம் ரூபாய் 10.26 லட்சம் மதிப்பிலான மஞ்சள் போன்றவற்றை கொள்முதல் செய்து பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. விவசாயிகளிடம் மோசடி செய்த பணத்தில் சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லூர்துமேரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் டான்ஸ் பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...