பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஆய்வு!

கோவை: பறவை காய்ச்சல் எதிரொலியால் கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தமிழக கேரள எல்லைகளில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.


கோவை: பறவை காய்ச்சல் எதிரொலியால் கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தமிழக கேரள எல்லைகளில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் வாத்துகள் மூலம் பரவிய பறவைக் காய்ச்சல் கோழி உள்ளிட்ட பறவைகளுக்கும் பரவி வருகிறது.

இதனால் இந்த பறவைக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், உள்ளிட்ட தமிழக, கேரள எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர், உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினிகள் தெளித்து தமிழகப் பகுதியில் அனுப்பப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், இப்பணிகளை இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து கிருமி நாசிகள் தெளித்து தமிழக பகுதியில் அனுமதிக்க வேண்டுமென்று கால்நடை துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் வரும் வரை இப்பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...