கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கள்ளிமடை குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டது.

இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டார்.

மேலும் அப்பகுதியில் உள்ள கதிரவன் கார்டன் சங்கனூர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகள் சரி செய்யப்பட்டதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் எம்.முருகன், செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி நகரமைப்பு அலுவலர் ஐசக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.