கோவை: கோவையில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நம்மஊரு சந்தையில் பாரம்பரிய அரிசிகள், மரபு இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

தைப்பொங்கல் திருநாளை உழவர்களின் பொருட்களோடு கொண்டாடி மகிழ்ந்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கோவை காந்திபுரம் பவுர்ஹவுஸ் எதிரே கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஊரு சந்தை என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில், பாரம்பரிய அரிசிவகைகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு வகைகள், மரபு இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள், மூலிகைத் தேநீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள், வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான உள்ளாடைகள், அணையாடைகள், உடல் சுத்தப்பொடிகள், வெட்டி வேரிலான பொருட்கள், மண்பாண்டப் பொருட்கள், மர விளையாட்டுப் பொருட்கள், மூங்கில் பயன்பாட்டு பொருட்கள், சாப்பிட மதிய உணவு, அருந்துவதற்கு மலர் மற்றும் கனிச்சாறுகள், நீரா பானம் என இன்னும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்துப் பொருட்களும் `நம்ம ஊரு சந்தை'யில் கிடைக்கும்.
சந்தையைக் காண அனுமதி இலவசம். முற்றிலும் ஞெகிழி இல்லா சந்தை என்பதால் எண்ணெய் வாங்க பாத்திரங்களும், பொருட்கள் வாங்க துணிப்பையும் கொண்டு வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் விவரமறிய 9942118080, 9500125125 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.