கோவை: 10 மாதங்களுக்குப் பிறகு சாலக்குடியிலிருந்து வால்பாறைக்கு பேருந்து வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு சுழற்சி முறையில் இரண்டு பேருந்துகள் இயங்கிக்கொண்டிருந்தன. உலகையே உலுக்கிய கொரோனா தொற்று காரணமாக அந்த பேருந்துகள் கடந்த 10 மாதங்களாக கேரள எல்லையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவது நிறுத்தப்பட்டது. இந்தப் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். மேலும் இந்தப் பேருந்து 1964-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு, கேரளா ஒப்பந்தப்படி இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து சாலக்குடி இயங்கிக் கொண்டிருந்த தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மேலும் வால்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி, திருச்சூர் மற்றும் கேரளா செல்வதற்கும் சுற்றுலாத்தலமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும் மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது அவை நிறுத்தப்பட்டதால் வால்பாறை பகுதியில் உள்ள கேரள மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். வால்பாறை பகுதியில் வியாபாரிகள் சுமார் 40 சதவீதம் பேர் சாலக்குடி பகுதியிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் இப்பகுதியில் வாழும் மலையாள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.