கோவை: கோவை மாநகராட்சி மத்தியம் மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மத்திய மண்டலம் டாக்டர். இராதாகிருஷ்ணன் சாலை, டாடாபாத், இராஜீ நாயுடு லே-அவுட், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதிகளில் செயல்பட்டுவரும் கடைகளில் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது, அதற்கான குப்பைத்தொட்டிகளில் மட்டுமே
கொட்ட வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

மேலும், சாலைகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அப்பகுதிகளில் உள்ள மழைநீர் செல்லும் வடிகால் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி சரிசெய்து, நீரானது சீராக செல்ல பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறப்பட்டுள்ளதா, இல்லையா என கேட்டறிந்து, அடையாள அட்டை பெறப்படவில்லை என்றால் உடனடியாக தொடர்புடைய அலுவலா்களிடம் தெரிவித்து பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு சாலையோர வியாபாரிகளிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, அப்பகுதிகளில் குடிநீர் பணிகளுக்காக குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டதை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட இடங்களில் உடனடியாக சீரமைத்து சரிசெய்திட வேண்டுமெனவும், அதனைத்தொடர்ந்து, மத்திய ஆம்னி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பேக்கரிகள் ஆகிய கடைகளில் குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். இதனை கடைபிடிக்கப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பின்னா், கோவை கிழக்கு மண்டலம், வார்டு எண்.56 பீளமேடு, பி.எஸ்.ஜி ஹட்கோ காலனி பகுதிகளில் நடைபெற்று வரும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்ட அவர், வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்காக கணினியில்
பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தும், வார்டு எண்.64 பகுதியில் ஏற்பட்டுள்ள பழுதடைந்த சாலையினை சரிசெய்திட வேண்டுமென தெரிவித்தார்.
பின்னர், இராமநாதபுரம், செளரிபாளையம் பிரிவு, நாகப்பன் வீதியில் மழைநீர் செல்லும் வடிகால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ் (மத்தியம்), எம்.முருகன் (கிழக்கு), செயற்பொறியாளா் (மத்தியம்) ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற்பொறியாள் (திட்டம்) ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன்(கிழக்கு) மற்றும் பணி மேற்பார்வையாளா், மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.