திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கான ஒத்திகை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இந்த தடுப்பூசி சிறப்பு முகாமுக்கான ஒத்திகை நடைபெற்றது. திருப்பூர் அரசு மருத்துவமனை, திருப்பூர் மாநகராட்சி டி.எஸ்.கே. நகர சுகாதார மையம், உடுமலை அரசு மருத்துவமனை, பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சரண் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தின் ஐந்து இடங்களில் நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியின்போது தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு, படுக்கை வசதி, 100 பேருக்கு தடுப்பூசி போட எவ்வளவு நேரம் ஆகும் என்பது போன்ற ஒத்திகைகள் நடத்தப்பட்டன. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஒத்திகை முகாமில் அரசு மருத்துவகல்லூரி இயக்குநர் வள்ளி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஒத்திகைப் பணிகளை சரிபார்த்தனர்.