கோவை: கருமத்தம்பட்டி அருகே பாவு நூல் வாங்கி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை கருமத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கருமத்தம்பட்டி அருகே பாவு நூல் வாங்கி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை கருமத்தம்பட்டி காவல்துறையினர்கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் அருகே உள்ள சேடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அப்பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி விசைத்தறிகளுக்கு பாவு நூல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தனபால் மற்றும் ராஜேஷ் ஆகியோர் செந்தில்குமார் நடத்திவரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கணக்குவைத்து பாவு நூல் வாங்கி வந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகை குறித்து டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் செந்தில்குமார் கேட்டார். அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததுடன் தகாத வார்த்தைகளால் பேசி செந்தில்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, இதுதொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் தனபால் மற்றும் ராஜேஷ் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவர்கள்மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.