கோவையில் மழை காலங்களில் மந்தகதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளால் வாகன ஓட்டிகள் அவதி - விரைந்து சீரமைக்க கோரிக்கை!

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் மழை காலங்களில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் மழை காலங்களில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



கோவை மாவட்டம் சீர்மிகு நகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கான தடையம் ஏதுமின்றி காணப்படுகின்றன. மேலும், மழை காலங்களில் நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சாலைகளில் சென்றால் குழிகளுக்குள் சிக்கிக் கொள்கின்றன.



இந்நிலையில், கோவை உப்பிலி பாளையத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையினால் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் சாலையில் மண் வழு குறைந்தன. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன. மேலும், போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்தன. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்தனர்.

இருப்பினும் இதுபோன்று தொடர்ந்து சாலைகளில் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. அதை பல இடங்களில் தடுக்கும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை முடிக்கப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டும் பகுதி வாசிகள், பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...