அரசு மருத்துவமனை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் 3,316 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கோவை: கோவை அரசு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் 3,316 பேருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் 3,316 பேருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.



நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, கற்பகம் மருத்துவமனை, கிணத்துக்கடவு மற்றும் சமத்துவ ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை அரசு மருத்துவமனையின் பிரதான கட்டடத்தின் நான்காவது தளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த காத்திருப்பு அறையுடன் கூடிய பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ்செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3,316 பேருக்கு தடுப்பூசி செலுத்த முன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.



கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் கட்டமாக கோவையில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...