கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை முகாம்: சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன் களப்பணியாளர்களை கொண்டு செயல்முறை விளக்கம்

பொள்ளாச்சி: கொரோனா நோய்க்கான தடுப்பூசி விரைவில் மத்திய அரசு சார்பில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என்று அரசு அறிவித்திருந்தது.


பொள்ளாச்சி: கொரோனா நோய்க்கான தடுப்பூசி விரைவில் மத்திய அரசு சார்பில்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என்று அரசு அறிவித்திருந்தது.



தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் முதல் முன் கொரோனா கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், முதற் கட்டமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் கோவை மாவட்ட அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி - சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிட்ட 5 மையங்களில் சிறப்பு தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி -சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 முன் களபணியாளர்களைக் கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த ஒத்திகை மற்றும் செயல் முறை விளக்க முகாமை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி போடும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...