கோவை: கோவை குறிச்சி பகுதியிலிருந்து உக்கடம் செல்லும் சாலையில் உள்ள ஆலமரத்தில் முறிந்து விழும் நிலையில் இருந்த கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
கோவை: கோவை குறிச்சி பகுதியிலிருந்து உக்கடம் செல்லும் சாலையில் உள்ள ஆலமரத்தில்முறிந்து விழும் நிலையில் இருந்த கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.

கோவை குறிச்சி பகுதியில் இருந்து உக்கடம் செல்லும் சாலையில் குறிச்சி குளக்கரையில் உள்ள பொங்காளியம்மன் கோவில் எதிரே பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இதன் கிளை ஒன்று முறிந்த நிலையில் சாலையில் விழும் தருவாயில் இருந்தது. இந்த நிலையில்ஆலமரத்தின் முறிந்த கிளையை அகற்றக்கோரி மாநகராட்சியில் புகார் அளித்தனர்.
கோவையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்கள் ஆல மரத்தின் கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இந்தப் பணிகளால் குறிச்சியில் இருந்து உக்கடம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.