கோவை: நாய்கள் கடித்ததால் காயமடைந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மருதமலை சாலையில் நேற்று காலை சிலர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாரதியார் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பாக புள்ளிமான் ஒன்று தலையில் பலத்த காயத்துடன் படுத்திருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து புள்ளிமானை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் மான் யார் கையிலும் சிக்காமல் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தது. காலை 10 மணி ஆகிவிட்டதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு வனக்காப்பாளர் அருண்குமார், வனக் காவலர் செல்வராஜ் ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே மானைப் பிடித்தனர். பின்னர் அந்த மானுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக வாகனத்தில் ஏற்றி கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மான் பரிதாபமாக இறந்துவிட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த மானுக்கு 6 வயது இருக்கும். இந்த மான் நேற்று இரவு ஊருக்குள் புகுந்து சுற்றித் திரிந்துள்ளது. அப்போது நாய்கள் துரத்தி மானை கடித்துள்ளன. இதன் காரணமாகவே மானுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மானை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். ஆனால் செல்லும் வழியிலேயே மான் பரிதாபமாக இறந்து விட்டது' என்றனர்.