தொழிலில் நஷ்டம்: லாரி அதிபர் மனைவி தூக்கு போட்டு சாவு!

கோவை: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லாரி அதிபர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லாரி அதிபர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்துச்சாமி வீதியைச் சேர்ந்தவர் குகன் மனோஜ், லாரி அதிபர். இவரது மனைவி சுகன்யா தேவி (வயது 29). இவர்களுக்கு மூன்று வருடத்திற்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குகன் மனோஜ் தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்காக 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி முதலீடு செய்ததாகத் தெரிகிறது. ஆனால் தொழில் நஷ்டமடைந்ததால் அவர் அந்தப் பணத்தை இழந்துவிட்டார். இதனால் குகன் மனோஜ் மற்றும் சுகன்யா தேவி கடனாகப் பெற்ற அந்தத் தொகையை திருப்பிச் செலுத்த கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சுகன்யா தேவி மனவேதனையுடன் இருந்து வந்தார். விரக்தியுடன் காணப்பட்ட அவர் நேற்று வீட்டின் அறைக்குள் சென்று திடீரென சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...