மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி!

கோவை: மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை சூலூர் பெரிய வதம்சேரி, நல்லி கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி, நெசவுத் தொழிலாளி. இவரது மகன் விக்னேஷ் (வயது 16). இவர் சின்ன வதம்பச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று தனது வீட்டில் உள்ள தோட்டங்களுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் கை-கால்களை கழுவுவதற்காக வீட்டிலிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்தார். அப்போது தொட்டியின் அருகே இருந்த மோட்டாரைத் தொட்டார். மின்கசிவு ஏற்பட்டதால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஒரே மகன் இறந்ததால் துளசிராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...