மழையால் சேதமடைந்த வீடு இடிந்து வாலிபர் பலி: தாய் கவலைக்கிடம்!

கோவை: சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்த வீடு இடிந்து வாலிபர் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த அவரது தாய் கவலைக்கிடமாக உள்ளார்.


கோவை: சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்த வீடு இடிந்து வாலிபர் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த அவரது தாய் கவலைக்கிடமாக உள்ளார்.

கோவை சித்தாபுதூர் ஹரிபுரத்தில் வசிப்பவர் சரஸ்வதி (வயது 55). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மூன்றாவது மகன் ராஜசேகருடன் (வயது 30) வசித்து வந்தார்.



இவர்கள் வசிக்கும் வீடு 40 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்த ஓட்டு வீடாகும். இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.



இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக பழமையான அந்த வீடு மேலும் பழுதடைந்தது. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள பழுதடைந்த 48 வீடுகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் தங்க வேண்டாம் எனவும் அவர்கள் தங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மழை நின்று விட்டதால் அரசு ஏற்பாடு செய்த இடத்திற்கு யாரும் செல்லவில்லை எனத்தெரிகிறது.



இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் ராஜசேகர் மற்றும் அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் பலியானார். தலையில் காயம்பட்ட சரஸ்வதி கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...