கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் 3 பேரும் கோவை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இது தொடர்பாக 2019-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு, சிவில் என்ஜினீயர் சபரிராஜன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நேரத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தி லேப்டாப், செல்போன்களை கைப்பற்றி விசாரித்தனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே பொள்ளாச்சியில் முகாமிட்டு இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கண்காணித்தனர்.முதற்கட்டமாக அ.தி.மு.க மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களை கோவை மகிளா கோர்ட் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மூன்று பேரையும் சிறையில் அடைப்பதற்கு முன்பாக கோவை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரும் கோபி சிறைக்கு மாற்றப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது பற்றி சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது. விசாரணையில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பெண்களை கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நேற்று முன்தினம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறையில் அடைக்க படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களை 15 நாள் தனிமைப்படுத்தி கொள்வதற்காக மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நேற்று இரவு அவர்கள் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து கோபி சிறைக்கு மாற்றப்பட்டனர்.பாலியல் பலாத்கார வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சபரிராஜனுடன் அருளானந்தம் அவரது நண்பர்கள், பைக் பாபு, ஹாரன் பால் ஆகியோர் சேர்ந்துகொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பெண்களை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்து அந்த பெண்களை மிரட்டி வைக்துள்ளனர். உயிருக்கு பயந்து போன பெண்கள் அதை வெளியே கூறவில்லை.
இதற்கிடையே வெளியான வீடியோவில் 3 பெண்களின் முகம் தெரியவே சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் அருளானந்தம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. அருளானந்தம் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அப்படி காவலில் எடுத்து விசாரிக்கும்போது இன்னும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ளனர். அங்கு அருளானந்தம் உள்பட 3 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள் யார் என்ற பட்டியலை சேகரித்து அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். பொள்ளாச்சி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.